முச்சக்கர வண்டியில் மீட்டர் மற்றும் பற்றுசீட்டு இன்று முதல் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிக்காக பின்பற்ற வேண்டிய புதிய பல சட்டத்திட்டங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளன.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானிக்கமைய இந்த சட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த புதிய சட்டங்களை செயற்படுத்தும் தினம் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படாத நிலையில் விசேட வர்த்தமானி வெளியிட்டு இந்த புதிய சட்டத்தை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வாடகைக்கு அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும், முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களினால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுத்தப்படும் டெக்ஸி மீட்டர் பொருத்தப்பட்டிப்பது கட்டாயமாகும்.

மேலும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்க விசேட வர்த்தமானிக்கமைய கட்டணம் செலுத்திய பின்னர் அதற்கான பற்று சீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.