அமெரிக்காவுக்கு வருகை தரும் சீன அதிபரை சந்திக்க டிரம்ப் தயக்கம்

சீன அதிபர் ஸி ஷின்பிங் அடுத்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார்.

புளோரிடாவில் மார்- ஆ-லாகோ என்ற இடத்தில் உள்ள டிரம்பின் இல்லத்தில் இச்சந்திப்பு நடக்கிறது. இவர்கள் இருவரின் இச்சந்திப்பு உலகின் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். இதை சீனா வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அதை வெள்ளை மாளிகை செயலாளர் சீன் ஸ்பைசரும் இருவரது சந்திப்பையும் உறுதி செய்தார். அவர்கள் இருவரும் பிரச்சனைக்குரிய வடகொரியா விவகாரம், வர்த்தகம், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என குறிப்பிட்டார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இப்பேச்சுவார்த்தை குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , எங்களுக்கு இடையே பெரிய பிரச்சனைகள் உள்ளன.

தென்சீன கடல், வர்த்தகம், வடகொரியா விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளன. எனவே சீன அதிபர் ஸி ஷின் பிங்குடன் ஆன பேச்சுவார்த்தை கடினமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.