பிரிந்து செல்ல மீண்டும் பொதுவாக்கெடுப்பு: பிரிட்டனுக்கு ஸ்காட்லாந்து பிரதமர் கடிதம்

பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இதுதொடர்பாக 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள் வாக்களித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதனையடுத்து, பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக செயல்படும் வகையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து அரசு மீண்டும் முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது.

மேலும், பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டனிடம் ஸ்காட்லாந்து பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் முறையாக கோரினார்.

இது தொடர்பாக பிரதமர் தெரசா மேவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், ஸ்காட்லாந்திற்கு தனிநாடாக பிரிந்து செல்லும் உரிமை என்று அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்காக நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிய ஸ்காட்லாந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.