இலங்கைக்குள் நுழையும் நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் : பாதுகாப்பு அமைச்சுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கைக்குள் ஐ.எஸ் ஐ.எஸ் ஆயுததாரிகள் இலகுவாக பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ், பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர்கள் சிலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போதே அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு பல்வேறு திட்டங்களை ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அமைதியான சூழ்நிலையில் இலங்கை காணப்படுகின்ற நிலையில், அங்கு நுழைந்து இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் ஐ.எஸ் ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்திருக்கின்றது.

இந்த நிலையில் இலங்கைக்குள் வந்து செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.