இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் அதிகரித்தே வண்ணமே இருக்கின்றது. இந்த நிலையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களிடம் அறவிடப்படும் தண்டப் பணம் அதிகரிப்பு தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 10,000 ரூபா தண்டப் பணம் 25,000 ரூபாவாக அதிகரிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சிறுவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துதல், மனித ஆட்கடத்தலுடன் தொடர்புடைய குற்றமாகும்.
எனவே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.