கொழும்புக்கு இணையாகுமா வட மாகாணம்? புலம்பெயர் தமிழர்களின் தீவிர ஆர்வம்

உரிமைகளுக்காக போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, அபிவிருத்திகளையும் இலக்காகக்கொண்டு செயற்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியை முன்னெடுப்பதில் தமிழ் சமூகம், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி இந்து தேசிய பாடசாலையின் தொழில்நுட்ப கூடத்தை நேற்று திறந்து வைத்து அமைச்சர் உரையாற்றினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் எல்லாப் பகுதியிலும் இன்று போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அரசாங்க வேலை தேவையென ஒரு சாரார் போராட்டம் நடத்துகின்றனர். அவற்றை தேடிக் கொள்ளவதில் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

வட மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதில் புலம்பெயர் சமூகம் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக பெருந்தொகை பணத்தை செலவிட தயாராக உள்ளனர். எனினும் வீணான இழுத்தடிப்புகளால் அவை தடைப்படுகின்றன.

ஒரு குடையின் கீழான ஒருங்கிணைந்த வசதி வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் பலரின் தொழில்வாய்ப்பிற்கு உதவ முடியும்.

உரிமைகளுக்காக போடுகின்ற நாம் அபிவிருத்திகளையும் இலக்காக கொள்ள வேண்டும். புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய மூலதனங்கள் வடக்கில் இருக்கின்றன.

அவற்றை முறையாக உரிய வகையில் கையாண்டால் கொழும்பிடம் கையேந்திய வேண்டிய நிலை ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.