விஜயகாந்தின் அண்ணன் மகன் திடீர் மரணம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த அண்ணன் மகன் சிம்ஹா திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

விஜயகாந்தின் மூத்த அண்ணன் மகன் ராஜ சிம்ஹா(42)வின் தந்தை அவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் விஜயகாந்த் தான் அவரை வளர்த்துள்ளார்.

இவர் ஜீன்ஸ், படையப்பா ஆகிய படங்களில் விசுவல் எஃபெக்ட் மேற்பார்வையாளராகவும் விஜயகாந்தின் பல படங்களில் சி.ஜி பணிகளையும் இவர் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.