சசிகலா போட்டோ வைச்சாலே தோல்வி தான்: உண்மையை ஒத்துக் கொண்ட முதல்வர்

ஆர்.கே நகர் இடைதேர்தலில் சசிகலாவின் படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி ஏற்று கொண்டுள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சரம் செய்தார்.

அப்போது அவரிடம் நிரூபர்கள், சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்ற ஓபிஎஸ் அணியினர் கேள்விக்கு விளக்கம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி, என்ன வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து தான் நாங்கள் பிரசாரம் செய்கிறோம் என பதிலளித்தார்.

இதன் மூலம் சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.