இயக்குனர் கௌதமன் சென்னையில் கைது!

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல திரைப்பட இயக்குனர் கௌதமன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என புதுடெல்லியில் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஒன்று கூடினார்கள்.

இந்த போராட்டத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் கௌதமன் கலந்து கொண்டார்.

அப்போது மாணவர்களுடன் சேர்ந்து கௌதமன் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

இதையடுத்து பொலிசார் கௌதமனையும், மாணவர்களையும் கைது செய்தனர். போராட்டத்துக்கு அனுமதி பெற்றும் எங்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த போகிறோம் என கௌதமன் கூறியுள்ளார்.