கோலிக்கு கங்குலி அறிவுரை!

இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வீராட்கோலி ரன் குவிக்க முடியாமல் போனதற்கு உணர்ச்சி வசப்பட்டதே காரணமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்பதில் கேப்டனான வீராட்கோலி தீவிரமாக செயல்பட்டு உணர்ச்சி வசப்பட்டார்.

இனிவரும் போட்டிகளில் அவர் உணர்ச்சி வசப்படக்கூடாது. இதில் இருந்து அவர் பாடம் கற்று கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.