கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தின் இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கஜோல் நடித்துள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி’ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஜுலை 14-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்தது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இன்றைய கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று பார்த்து வாழ்த்தி உள்ளார். இந்த தகவலை நடிகர் தனுஷ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, சூப்பர் ஸ்டாரும், எனது அப்பாவுமான ரஜினிகாந்த் `விஐபி 2′ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் பங்கேற்று வாழ்த்தினார். இதை விட சிறந்ததை இனி என் வாழ்வில் பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். தனுஷ் கூறும் போது, கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்தது. கடைசி நாளில் தலைவரின் ஆசியும் கிடைத்தது சிறப்பு. நன்றி சவுந்தர்யா ரஜினிகாந்த், தாணு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.