குடும்பத்திற்கு மகுடம் சூட்டுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவில்லை எனவும் மக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றவே இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இன்றைய தினம் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் இந்த வருடத்திற்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியால் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.