தமிழகத்தின் தலையெழுத்தைப் பாருங்க.. மாதவன் தீபாவாம்!

மாதவன் தீபா என்று பெயரை மாற்றிக்கொண்டுள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரான மாதவன். ஜெயலலிதாவின் புகழை யார் பங்குபோடுவது என்பதில் பெரும் போட்டி நிலவி வருகிறது.

சசிகலா தரப்பு, பன்னீர்செல்வம் தரப்புக்கு போட்டியாக தீபா தரப்பும் மல்லுக்கு நிற்கிறது. இந்த நிலையில், கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு தீபாவின் கணவர் மாதவன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அடிக்கப்பட்ட போஸ்டரில், தொண்டர்களின் தோழன், மாதவன் தீபா என பெயரிடப்பட்டிருந்தது. மனைவி பெயருக்கு பின்னால் கணவர் பெயரை போட்டுக்கொள்வது வழக்கம். ஆனால் தீபா பெரிய வீட்டு பிள்ளை என்பதால் மாதவன் அவர் பெயரை பின்னால் போட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.