இன்றைய ராசி பலன்கள் 04.04.2017

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவி யை செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நெருங்கி யவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கு வார்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.

  • கன்னி

    கன்னி: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். சகோதர வகையில் நன்மை உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • மீனம்

    மீனம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஒரு பக்கம் சோர்வு, களைப்பு என இருந்தாலும் மறுபக்கம் விடா முயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.