மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து எவ்வித உத்தேச யோசனைகளையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் நிலைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என்ற போதிலும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக செலவிட்டேனும் மக்களுக்கு இடையறாது மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.