புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரின் பிணை மனு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) பரிசீலிக்கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
மாணவி கொலைவழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பவரது, விளக்க மறியல் காலத்தை நீடிக்க கோரி நேற்று திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர் மன்றில் முற்படுத்தப்பட்டார்.
தான் குற்றம் செய்யாது தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளேன். இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தியது குற்றமா ? என மன்றில் சந்தேக நபர் கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை இன்றைய தினத்திற்கு (செவ்வாய்) ஒத்திவைத்த நீதிபதி, இன்றைய தினம் குறித்த சந்தேக நபரின் பிணை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.