அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ், சிங்களப் பாடசாலைகளுக்கான, 2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளை, 5ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவித்துள்ள கல்வி அமைச்சு, இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் 6ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைவதுடன், இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.