உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: 1167 மதுபான கடைகள் ஒடிசாவில் மூடல்

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலைக்கு இருபுறமும் 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந்தேதிக்குள் மூடுமாறு, கடந்த டிசம்பர் 15-ந்தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக 1,167 மதுபான நிலையங்களை ஒடிசா அரசு கடந்த மார்ச் 31-ம் தேதி மூடியுள்ளது.

ஓட்டல்கள், ரெஸ்டாரெண்ட்டுகள் மற்றும் ஒரு மிலிட்டரி கேண்டீனில் இயங்கி வந்த மதுக்கடைகள் உட்பட மொத்தம் 1,167 கடைகளை ஒடிசா அரசு மூடச்செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 1200 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கலால் துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.