வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா தனியாக எதிர் கொள்ளும் என்று டர்ம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் சந்தித்து பேச இருக்கிறார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்த நேர்காணலில், சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடான சந்திப்பில் விவாதிக்க நிறைய உள்ளது என்றார்.
வர்த்தகம் மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் குறித்து சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடான சந்திப்பில் பேச இருப்பதாகவும் டிர்ம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் வடகொரியாவைப் பற்றியும் பேச இருக்கிறேன். வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்க சீனா அமெரிக்காவுக்கு உதவினால் அது சீனாவுக்கு மிக நல்லது. அவர்கள் உதவவில்லை என்றாலும் அமெரிக்கா தனியாக சீனாவை எதிர் கொள்ளும்” என்றார் டிரம்ப்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் சீனா மற்றும் அமெரிக்காவிடையே வர்த்தகம், தென் சீனக் கடல் விவகாரத்தில் வார்த்தை மோதல்கள் நிலவி வந்தது. இந்த நிலையில் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது.