மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது.
இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் உலகின் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர் (சுவிட்சர் லாந்து)- ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதினார்கள்.
இதில் பெடரர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் நடாலை எளிதில் வீழ்த்தி மியாமி ஓபன் பட்டத்தை வென்றார்.
6 மாத காலத்துக்கு பிறகு களம் இறங்கியுள்ள பெடரரின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருக்கிறது. இந்த ஆண்டில் அவர் வென்ற 3-வது பட்டமாகும். கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன், மற்றும் இன்டியன் வெல்ஸ் போட்டியில் பட்டம் வென்று இருந்தார்.
35 வயதான பெடரருடன் கடைசியாக மோதிய 4 ஆட்டத்திலும், நடால் தோற்று உள்ளார்.