கண்டியில் இரட்டை வழி சுரங்க பாதை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி மூடப்பட்டுள்ளமையால், கண்டி நகரத்தில் பாரிய போக்குவரத்து நெருக்கடி காணப்படுவதாக பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதற்கான தீர்வாக சுரங்க வழிப்பாதை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 5.5 அடி நீளத்தில் இந்த சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.
கண்டி சுதுஹும்பொலவில் இருந்து தென்னெகும்புர வரை இந்த இரட்டை வழி சுரங்கப்பாதை விஸ்தரிக்கப்படவுள்ளது.
இந்த சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்பட்டதனை தொடர்ந்து கண்டி நகரம், விலியம் கொபல்லவ மாவத்தை, கண்டு ஏரி சுற்றுப்பாதை, தலதா மாளிகையில் இருந்து தென்னேகும்புர வரையிலான வீதியில் காணப்படுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதுகாப்பான நிறுத்துமிட வசதி உள்ளடங்களாக, சர்வதேச தரத்தில் இந்த நவீன சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.