‘நல்லூர் பிரகடனம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையில் காணி உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் பிரகடனம்’ யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரகடனம் இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது, மதத்தலைவர்கள், காணிகளை இழந்த தமிழ் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
காணிகளை இழந்த மக்கள் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை இழந்து துன்புற்று வருவதை இப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தமது காணிகளை விடுவிப்பதோடு நட்ட ஈடுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.