ஜெனிவாவின் கடும் அழுத்தம்! போர்க்குற்ற விசாரணைக்கு தயாராகும் இலங்கை

ஜெனிவா யோசனையை செயற்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழு எதிர்வரும் வரும் மாதத்தில் உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கு இணையாக இந்த ஆணைக்குழுவை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் இடம்பெற்றதா என ஆராய்வதே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

இதற்கமைய போர்க்குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத்தினர் மீது தீவிர விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவிற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.