விமலுக்கு ஏற்பட்ட தொற்று நோய் : நுண்ணுயிர் கொல்லி சிகிச்சை தீவிரம்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சிரில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு நுண்ணுயிர் கொல்லி மருந்து வகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இரத்த பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், அது உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து நோய்வாய்ப்பட்ட விமல் வீரவன்ச கடந்த 26ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உண்ணா விரதத்தை நிறைவு செய்த அவருக்கு தற்போது காய்ச்சலுக்காக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.