யோக நிலையில் காட்சி தரும் ஸ்ரீ ராமபிரான்

நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் மிகவும் சிறப்பு பெற்றவராக கருதப்படுகிறார். சன்னதியில் ராமபிரான் தனது கோதண்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்த நிலையில் தனது கண்களை முடியவாறு யோக நிலையில் காணப்படுகிறார்.

தனது திருக்கரங்களில் எந்த ஆயுதங்களையும் இல்லாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காணப்படுவது மிகுந்த அபூர்வ திருக்கோலம்  ஆகும். இதனால் இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் ” யோக ராமர்” என்று பெருமை போற்ற அழைக்கப்படுகிறார்.

ராமர் அருகே சீதா பிராட்டி அமர்ந்த நிலையில் தாமரை மலர் ஏந்தி காட்சி தருகிறார். லக்ஷ்மணன் ராமருக்கு வலது புறம் அஞ்சலி செலுத்திய வண்ணம் திருக்கோலம் கொண்டு இருக்கிறார். ராமனும், சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி தர, அவர்கள் எதிரே ஹனுமன் ” பிரஹ்மா சூத்திரம்” படித்தவாறு காட்சி கொடுப்பது கூடுதல் சிறப்பை இந்த ஸ்தலத்திற்கு சேர்கிறது.

ஸ்தல புராணம் படி ராமர் அயோதி திரும்பும் பொழுது, சுக பிரஹ்ம ரிஷிக்கு காட்சி கொடுத்து இந்த திருக்கோவிலில்  தங்கி அருள்புரிந்ததாக கூறப்படுகிறது.