-
மேஷம்
மேஷம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப் பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல் களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். உழைப்பால் உயரும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர் கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். அழகு, இளமை கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புது நட்பு மலரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தின ரிடம் கோபத்தை காட்டாதீர்கள். ஆயில்யம் நட்சத்திரக் காரர்கள் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானம் என மனம் செல்லும். உறவினர் கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். லேசாக தலை வலி, வயிற்று வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
கன்னி
கன்னி: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். குடும்பத்தினரின் எண்ணங் களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். பெருந்தன்மை யுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
-
துலாம்
துலாம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். சகோ தரர்களால் பயனடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நம்பிக் கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். விலகி நின்ற வர்கள் விரும்பி வருவார்கள். வாகனப் பழுதை சரி செய் வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
-
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
மகரம்
மகரம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரத் தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.