இத்தாலியில் மின்சார ரயில் ஓட்டும் இலங்கை பெண்! முதல் பெண்மணி என சாதனை

உலகின் வளர்ச்சியடைந்துள்ள நாடொன்றில், இலங்கை இளம் பெண் ஒருவர் மின்சார ரயில் ஓட்டுனராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

இலங்கையில் பெண்கள் ரயில் ஓட்டுநர்களாக செயற்படுவது பற்றி தகவல் இல்லை. எனினும் தேவிகா திலானி என்பவர் இத்தாலியில் அதி நவீன மின்சார ரயிலின் ஓட்டுனராக செயற்படுகின்றார்.

இலங்கையின் பூகொடை தரால பிரதேசத்தில் பிறந்த தேவிகா திலானி, மூன்றாம் வகுப்பு வரை பூகொடை, தரால பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் அவரது பெற்றோர் இத்தாலியில் தொழிலுக்கு சென்றமையினால் அவருக்கு இலங்கையை விட்டு செல்ல நேரிட்டுள்ளது.

இத்தாலியின் மெசினா, வெவியா கல்லூரியில் கல்வி கற்றவர், பொலனோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுள்ளார். இலங்கை மீது அவர் அதிக விருப்பம் கொண்டுள்ள ஒருவராகும்.

இந்த நிலையில் அவர் தனது தொழிலாக ரயில் ஒட்டு பணியை தெரிவு செய்துள்ளார். அதற்கமைய இத்தாலி ரயில் ஒன்றில் சேவை செய்யும் முதல் இலங்கை பெண்ணாக திலனி காணப்பட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ஆடையில் இலங்கை கொடி ஒன்றை எப்போதும் அணிந்திருப்பது முக்கிய விடயமாக காணப்படுகின்றது.

இத்தாலி ரயிலில் பயணிக்கும் இலங்கையர்களை கண்டால் அவர்களுடன் நட்புறவுடன் பேசும் பழக்கத்தை இவர் கொண்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.