முள்ளிக்குளம் மற்றும் சிலாவத்துறை பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களை அகற்றவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளபொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விரைவில் தீர்வு கிடைக்கப்பெறும்எனவும் பிரதமர் கூறியுள்ளா்ர.
காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்முக்கியஸ்தர்களுடன், மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்விரைவில் பேச்சுக்களை நடத்தி விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வார் என்றும்பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முள்ளிக்குளம் மக்கள் தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி போராடி வருவது தொடர்பில் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.