வெளியில் வந்து வெட்டுவோம்! வித்தியா படுகொலையின் சந்தேகநபர்கள் கொலைமிரட்டல் குறித்து வழக்கு தாக்கல்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீது மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்துள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“பழிவாங்கும் நோக்குடன் எம்மை கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரை வெளியில் வந்த பின்னர் வெட்டுவோம்” என 2016ஆம் ஆண்டு குறித்த சந்தேகநபர்கள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கொலை மிரட்டல் தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.