மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மீட்கப்பட்ட எலும்பு பாகங்கள் தாஜூடீனது அல்ல!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மீட்கப்பட்ட எலும்பு பாகங்கள் ரகர் வீரர் வசீம் தாஜூடீனினது அல்ல என மரபணு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தாஜூடீனின் உடல் பாகங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த எலும்பு பாகங்கள் தாஜூடீனின் உடல் பாகங்கள் அல்ல என இரகசிய பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பொரளை ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி ருவான் இலப்பெரும இது குறித்து அறிவித்துள்ளார் என இரகசிய பொலிஸார், கொழும்பு பதில் நீதவான் பிரசாத் சில்வாவிடம் அறிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்த சாட்சியங்களை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 18ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.