போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தேவாலயமாக மாற்றுவோம் என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மதுசூதனன், அதிமுக தொண்டர்களே சிந்தியுங்கள்.
முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் வசிப்பதற்கு சசிகலா குடும்பத்தினருக்கு என்ன அருகதை இருக்கிறது?
தேர்தல் முடிந்தபிறகு அதிமுக தொண்டர்களைத் திரட்டி, இந்த குடும்பத்தை போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டுவதுதான் எங்களது முதல் வேலையாக இருக்கும். அதையடுத்து போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தேவாலயமாக மாற்றுவோம்” என்றார்.