டிடிவி தினகரன் மோசடி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டிடிவி தினகரன் மேல் உள்ள அன்னிய செலவாணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அன்னிய செலவாணி மோசடி வழக்கின் விசாரணைக்கு டிடிவி தினகரனை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராக நீதிபதி மலர்மதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் தினகரனும் அவரின் தரப்பிலும் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மாலைக்குள் ஆஜராக நீதிபதி கெடு விதித்திருந்தார். மாலையில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் மட்டும் நேரில் ஆஜரானார்.

இந்நிலையில், தேர்தல் காரணமாக தினகரன் ஆஜராகவில்லை என வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது, தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாமல் இருப்பது காலம் தாழ்த்துவதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதனை இறுதி வாய்ப்பாக எடுத்து கொண்டு வரும் திங்கட்கிழமை 10ம் திகதி டிடிவி தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளார்.