குரு ஸ்தோத்திரப் பாடல் :
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதிப னாகி
நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப் பாதம் போற்றி!
குணமிகு வியாழ குருபகவானே
மணம் உள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்!
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரஹதோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய்.
குரு காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
அதிதேவதா ப்ரத்யதிதேவதா ஸஹித ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ.
– இத்துதியை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் குரு தோஷங்கள் நீங்கும். குருபகவான் திருவருள் கிட்டும்.