சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்.
2010,2011 மற்றும் 2013 ஆகிய மூன்று வருடங்களாக சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறியமையினாலேயே துமிந்தவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே துமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு தொடர்பில்துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது