இந்தியா, இலங்கைக்கு வருடாந்தம் வழங்கி வரும் அபிவிருத்திக்கான நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியா, இலங்கைக்கு 73 கோடி ரூபாவை மாத்திரமே வழங்கியுள்ளது.
கடந்த 2014-2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு இந்தியா 499 கோடி இந்திய ரூபாவை வழங்கியது. கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியா 403 கோடி இந்திய ரூபாவை வழங்கியது.
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டின் மார்ச் 31 ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டில் இந்தியா 73 கோடி இந்திய ரூபாவை மட்டுமே வழங்கியது. இது குறிப்பிடத்தக்களவு குறைவான நிதியுதவி என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையை தவிர, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு வழங்கி வரும் நிதியுதவிகளையும் இந்தியா குறைத்துள்ளது.