முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த மற்றும் அவரது காதலி ஒரு குழந்தையை கொஞ்சும் சில புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவர்கள் கையில் இருக்கும் குழந்தை யாருடையது என்பது அனைவரினதும் கேள்வியாகும்.
ரோஹித்த ராஜபக்ச தனது காதலியுடன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள பல புகைப்படங்களில் இந்த குழந்தையும் காணப்படுகிறது.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள பலர் இந்த குழந்தை ரோஹித்த ராஜபக்சவின் குழந்தை என கூறியுள்ளனர்.
குறித்த குழந்தையுடன், மஹிந்த ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச, ரோஹித்த ராஜபக்ச மற்றம் அவரது காதலி என அனைவரும் காணப்படுகின்றனர்.
இதை பார்க்கும் போது மஹிந்த தாத்தாவாகி விட்டதாகவும், சிராந்தி பாட்டியாகி விட்டதாகவும் பல செய்திகள் வெளிவந்துள்ளன.
எது எப்படி இருந்த போதிலும் அந்த குழந்தை ரோஹித்த ராஜபக்சவின் குழந்தை அல்ல எனவும் ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவரின் குழந்தை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.