புதுவருடத்தில் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

தமிழ்-சிங்களப் புதுவருடத்துக்கு முன்னதாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா பத்தாயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, வறட்சியை முன்னிட்டு பயிரிடாதவர்களும் இந்த விசேட நிதியுதவியைப் பெறத் தகுதிபெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.