நாடு ஆபத்தான கட்டத்தில்! நோயாளிகளை பலிக்கடாவாக்கும் வைத்தியர்கள்

நாட்டில் நோய்த் தொற்று பரவியுள்ள நிலையில் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்துவது உசிதமானதல்ல என பிரஜைகள் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நோய்த் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பது அவர்களின் தொழில் ஒழுக்க விதிகளுக்கு புறம்பானது என சுட்டிக்காட்டியுள்ளது.

பிரஜைகள் அமைப்புக்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

இடதுசாரி அமைப்புக்கள் என்ற வகையில் நாம் தொழிற்சங்கப் போராட்டங்களை வரவேற்கின்றோம். எனினும் நோயாளிகளை பலிக்கடாவாக்கி அவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் செயற்பாடுகள் மருத்துவ தொழில்துறைக்கு இடையூறாக அமையவில்லை.

நோயாளிகளை ஆபத்தில் தள்ளும் தொழிற்சங்க நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.