சிறுநீரக கோளாறு! சிங்கப்பூர் செல்லும் விஜயகாந்த்: அதிர்ச்சியில் தொண்டர்கள்

சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22ம் திகதி நள்ளிரவு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பிரச்சனை ஏதுமில்லை, ஆண்டு தோறும் செய்து கொள்ளும் உடல் பரிசோதனைக்காக தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார் என அவர் மனைவி பிரேமலதா கூறினார்.

மேலும், ஆர்.கே நகர் தொகுதியில் அவர் பிரசாரம் செய்வார் எனவும் கூறினார்.

ஆனால், எல்லா முன்னனி கட்சிகளின் தலைவர்களும் ஆர்.கே நகர் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் அவர் இன்னும் பிரச்சாரத்துக்கு வரவில்லை.

இது குறித்து தேமுதிக -வின் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், அவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதாக சொல்கிறார்கள். அந்தத் தகவலை முழுமையாகச் சொல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை.

இந்த மாத இறுதியில், அவர் சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்காகச் செல்கிறார். ஆர்.கே நகர் பிரசாரத்துக்கு அவர் வருவது சந்தேகம் தான் என கூறியுள்ளனர்.

இந்த தகவல் தேமுதிக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.