எலுமிச்சையை தோலுடன் எடுத்துக் கொள்வது நல்லதா? தீயதா?

வெயில் காலம் வந்து விட்டது. இந்த நாட்களில் நாம் அடிக்கடி குடிக்கும் ஜூஸ்களில் ஒன்று லமன் ஜூஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று. எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தெளிவாக யோசிப்பதற்கும் பொட்டாசியம் மிக அவசியம். எலுமிச்சை சாற்றுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வாயை சுத்தம் செய்வதால் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் அழித்து வாய் துர்நாற்றம் அடிக்காமல் பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்கவும் எலுமிச்சை உதவி செய்கிறது. வாருங்கள் இப்போது அந்த எலுமிச்சை பற்றிய வேறு சில உண்மைகளைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்….

உண்மை 1
எலுமிச்சை ஒரு அற்புதமான பழம். எலுமிச்சையின் பழம் மட்டுமல்ல அதன் தோல் கூட சிறந்த மருத்துவ குணம் உடையது. இது பலருக்குத் தெரிவது இல்லை. அதனால் தான் எலுமிச்சைத் தோலை பலர் குப்பை தொட்டியில் போட்டு விடுகின்றனர்.

உண்மை 2
எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் சத்துக்களை விட அதனை தோலுடன் தின்பதால்திண்பதால் கிடைக்கும் சத்துக்கள் அதிகம் என்று சில ஆராயச்சி முடிவுகள் கூறுகிறன்றன.

உண்மை 3
எலுமிச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் – வைட்டமின் ஏ, ஈ, சி, பி6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்.

உண்மை 4
எலுமிச்சையை தோலுடன் சாப்பிட ஒரு சிறந்த வழி அதனை பிரிட்ஜில் வைத்து உறைய செய்து சாப்பிடுவது தான். அதை பிரிட்ஜில் வைக்கும் முன் கழுவ மறந்து விடாதீர்கள்.

உண்மை 5
அப்படி உறையச் செய்த எலுமிச்சையை எடுத்து அதன் இரு முனையையும் சீவி விட்டு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இதனை சூப், சாலட் மற்றும் பாஸ்தா போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.

உண்மை 6
அல்லது அந்த உறைந்த எலுமிச்சையை தோலுடன் துருவி வைத்துக் கொள்ளலாம். அதனை ஜூஸ், டீ அல்லது மில்க் சேக்ஸ் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம்.