யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரினால் மருத்துவ துறைக்கு தேவையான சில இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
யாழ், பலாலி வீதியை சேர்ந்த குலேந்திரன் ராஜா என்பவர், பல் அறுவை இயந்திரங்கள் சிலவற்றை தயாரித்துள்ளார்.
அவரது புதிய கண்டுபிடிப்பான பல் அறுவை நாற்காலியை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு யாழ், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்றது.
Tissomed Technologies என்ற நிறுவனத்தின் உரிமையாளரான குலேந்திர ராஜா உள்ளுர் தயாரிப்பாக நாற்காலியை வடிவமைத்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்புக்கு சுகாதார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த பல் அறுவை நாற்காலியை தயாரிப்பிற்கு 5.5 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.