மைத்திரிக்கும், ரணிலுக்கும் நன்றி! சிறையில் இருந்து வெளிவந்த விமல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நன்றிகளை தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சிறையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு நிபந்தனை அடிப்படையிலான பிணையினை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், பிணையில் வெளியில் வந்த விமல், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,

ஏற்கனவே இருந்த தெம்பை விடவும், அதிக உத்வேகத்துடன் அரசியலில் ஈடுபட வழியை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாகனத்தின் இயந்திரம் சூடாகினால்தான், அது வேகமாக செல்வதற்கு தயாராகும். அதேபோன்று எனது அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க என்னை சிறையில் இட்டு இந்த அரசாங்கம் தயாராக்கிவிட்டுள்ளது.

என்னை சிறையில் அடைத்து, என் வேகத்தை அதிகரித்துவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.