யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் 28.8 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இரு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய காணிகள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் பொதுமக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு பின்னர் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த தங்களின் வீடுகள், கட்டடங்கள் அனைத்தும், இடிக்கப்பட்டு தற்போது வெறும் தரைமட்டமாக்கப்பட்ட பகுதியாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக தமது காணிகளை அடையாளம் காண்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
1990ஆம் ஆண்டில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த குறித்த பகுதிகளை மீட்கும் முகமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.