இலங்கையின் போதைப் பொருள் கடத்தலை ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோர வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய நாடுளின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான பணியகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி சர்ஜி கெப்பினோஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான பணியகம் இந்து சமுத்திரத்தில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலை ஒடுக்க மேற்கொண்டு வரும் வேலைத்திட்டத்திற்கு இணையான வேலைத்திட்டத்தை இலங்கையிலும் அமுல்படுத்துமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை, இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ளதால், அதன் இருப்பிடத்தின் வசதிகளை பயன்படுத்தி இலங்கையை போதைப் பொருள் கடத்தலின் மத்திய நிலையமாக பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் இந்த பேச்சுவார்த்தையின் போது கூறியுள்ளார்.