ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. அதே சமயம் அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஆர்.கே.நகரில் போட்டியிடும் சசிகலா அணி தினகரனுக்கு அதிமுக அம்மா என்ற கட்சி பெயரும், தொப்பி சின்னமும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு அதிமுக புரட்சிதலைவி அம்மா என கட்சி பெயரும், மின் கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.
இந்நிலையில், சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் மதுசூதனனும், அதிமுக பெயரை பயன்படுத்தியதற்காக தினகரனும் நாளை மாலைக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.