கலிபோர்னியாவில் ‘செல்பி’ எடுத்த போது பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிர் தப்பினார்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அயுபர்ன் என்ற இடத்தின் அருகே பாரஸ்ட் கில் பாலம் உள்ளது. இது 60 அடி உயரத்தில் உள்ளது. அங்கு சில பெண்கள் உல்லாச சுற்றுப்பயணம் சென்று இருந்தனர்.

அந்த பாலத்தின் மீது அவர்கள் அனைவரும் ‘ கேட்வாக்’ நடந்து கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் சென்ற போது பாலத்துடன் சேர்ந்து ‘செல்பி’ எடுக்க முயன்றனர்.

அப்போது ‘செல்பி’ எடுத்த பெண் பாலத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். ‘செல்பி’ எடுத்த போது பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணை மீட்டனர். அப்போது அவர் உயிருடன் இருந்தார். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சொல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே அப்பெண் உயிர் பிழைத்தார்.