அமெரிக்காவின் ராணுவ செயலாளராக முன்னாள் ராணுவ மருத்துவர்: விரைவில் கையொப்பமிடும் டிரம்ப்?

அமெரிக்க ராணுவத்திற்கு மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் மார்க் கிரீன், அந்நாட்டு ராணுவத்தின் புதிய செயலாளராக நியமிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்சமயம் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெனஸ்ஸி மாநிலத்தின் மேல்சபை அதிகாரியாக பணியாற்றி வரும் மார்க் கிரீன் விரைவில் ராணுவ செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
160-வது பிரிவின் சிறப்பு வான்படையில் மார்க் கிரீன் பணியாற்றி வந்ததாகவும், அவர் அவசர துறைகளில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்வது மற்றும் மருத்துவமனைகளுக்கு உரிய சேவைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வந்ததாக வெள்ளை மாளிகை அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் நியமனம் செய்ய நினைத்தாலும் கூட மார்க் கிரீனை ராணுவ செயலாளராக தேர்வு செய்ய மேல்சபையில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.