ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கடம்பன்’. இப்படத்தை ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவா இயக்கி வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படம் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. அதன்படி, இரண்டு மொழிகளிலும் வருகிற 14-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. தமிழில் கடம்பன் என்ற பெயரிலும், தெலுங்கில் கஜேந்திரடு என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது.
கடம்பன் என்றால் முருகன், கஜேந்திரடு என்றால் விநாயகர். எனவே, தமிழில் தம்பியாகவும், தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார் ஆர்யா. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் காடுகள், மலைகளில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.