தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வில்பத்து வனம் தொடர்பிலான வர்த்தமானி தொடர்பில் முஸ்லிம் தலைவர்களை ஒன்றினைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கொழும்பு விஜேராம வீட்டிற்கு முஸ்லிம் தலைவர்களை அழைத்து முஸ்லிம் மக்களின் உரிமைக்காக முன் நிற்பதாகவும், வில்பத்து வனம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு எதிராக அந்த கைக்கோர்ப்பதற்கு தயார் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
எனினும் ராஜபக்ச ஆட்சியின் போதே தங்களின் வீடு வாசல்களை பிடித்து வனத்திற்காக பெயரிடப்பட்டுள்ளதாக அங்கு வருகைத்தந்துள்ள முஸ்லிம் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கமைய 6042 ஹெக்டேயர் கரக்குலி, மரிச்சகட்டி ஆகிய வனங்கள் 2012ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 10ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2108 ஹெக்டேயர் விலாத்திக்குளம் வனம் 2012ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைக்கமைய, வில்பத்து வடக்கு மன்னார் மாவட்டத்திற்கான வனப்பகுதியின் 11 வீதத்திற்கு அதிகமானவைகள் யுத்தத்திற்கு பின்னரே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் ராஜபக்சர்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அழுத்தமான நிலைமை தொடர்பில் அந்த தலைவர்களினால் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய காலப்பகுதியினுள் மஹிந்த குழுவின் செயற்பாடு குறித்தும் அறிவித்துள்ளனர். அதற்கைமைய மீண்டும் ராஜபக்சர்களை நம்புவதற்கான வாய்ப்புகள் இல்லை என அறிவித்துள்ளனர்.