மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் சர்ச்சைக்குரிய நீலப்படையணி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய நீலப்படையணி என்ற ‘நில்பலகாய’ மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

தகவல்களின்படி நாமல் ராஜபக்ஸவின் பிறந்த நாளுடன் இந்த நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நில் பலகாய, மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது நடைமுறைக்கு வந்தது.

இதன்போது பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டு அவற்றை குறித்த படையணி பயன்படுத்தி வந்தது.

இதன்போது நிதி துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும் முறைப்பாடுகள் உள்ளன.

அத்துடன் தமது மகனின் இந்த படையணிக்கு மஹிந்த ராஜபக்ச போதுமான அதிகாரங்களை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.